/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் 13 இடங்களில் கிளை திறப்பு
/
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் 13 இடங்களில் கிளை திறப்பு
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் 13 இடங்களில் கிளை திறப்பு
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் 13 இடங்களில் கிளை திறப்பு
ADDED : மே 13, 2025 12:43 AM

செஞ்சி : தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் 13 இடங்களில் கிளை திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் செஞ்சி ஒன்றியத்தில் மேல்பாப்பாம்பாடி, காமகரம், காட்டு சித்தாமூர், புத்தகரம், பாலப்பாடி ஆகிய 5 கிராமங்களிலும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் தென்பாலை, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பரையம்பட்டு, தாழங்குணம், கரடிகுப்பம், மேட்டுவயலாமூர், கூடுவாம்பூண்டி ஆகிய 8 இடங்களிலும் கிளை துவக்க விழா மற்றும் கொடியேற்றி பெயர்ப்பலகை திறப்பு விழா நடந்தது.
சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கொடி ஏற்றி, கிளையினை திறந்து வைத்து பேசினார். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாநில பொது செயலாளர் முத்து விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.இதில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.