/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உழவர் நலத்துறை கலந்தாய்வுக் கூட்டம்
/
உழவர் நலத்துறை கலந்தாய்வுக் கூட்டம்
ADDED : ஆக 21, 2025 09:15 PM

விழுப்புரம்; விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டம், ஊட்டச்சத்து மேலாண்மை நுண்ணுாட்ட சத்துக்கள், உயிர் உரங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஊடுப்பயிர் மேற்கொள்பவர்களுக்கு 50 சதவீத மானியம்.
ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம், நெல் விதை விநியோகம், திணை, கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள் உற்பத்திகள் குறித்தும் ஆலோசனை நடந்தது.
விவசாயிகளுக்கு நேரடி மானியம், ஊக்கத்தொகை வழங்குவது, வேளாண் பொறியியல் துறை மூலமாக வேளாண் இயந்திர பொருட்கள் வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சுமதி உட்பட துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.