/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உழவர் நலத்துறை திட்டம் துவக்க விழா
/
உழவர் நலத்துறை திட்டம் துவக்க விழா
ADDED : ஜூன் 14, 2025 01:58 AM

வானுார் : கிளியனுார் அடுத்த கிளாப்பாக்கம் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை- உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா நடந்தது.
துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். ஒன்றிய துணை சேர்மன் பருவகீர்த்தனா வினாயகமூர்த்தி திட்டத்தை துவக்கி வைத்தார்.
விழாவில் வானுார் துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உழவர் நலத்துறையின் வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் இதர சார்பு துறையைச் சேர்ந்த அலுவலர்கள், உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
தோட்டக்கலை துறை உதவி வேளாண் அலுவலர் பக்தவச்சலம், தோட்டக்கலைத் துறையின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
விழாவில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டன. விவசாயிகள் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். முகாமில் 35க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி செய்திருந்தனர்.