நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: இடை நிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் விழுப்புரம் நகராட்சி திடலில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜகுமாரி தலைமை வகித்தார். செயலாளர் ஜோஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். தி.மு.க., அரசு, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தினர்.