/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாதை தகராறில் உறவினர் கொலை தந்தை, 2 மகன்கள் கைது
/
பாதை தகராறில் உறவினர் கொலை தந்தை, 2 மகன்கள் கைது
ADDED : ஜன 19, 2025 06:47 AM
செஞ்சி: பாதை தகராறில் உறவினரை வெட்டி கொலை செய்த தந்தை மற்றும் இரு மகன்களை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தை சேர்ந்தவர்கள் மகாலிங்கம் மகன்கள் சங்கர்,40; சேகர்,38: இவர்களின் பெரியப்பா கோவிந்தராஜ் மகன் ஏழுமலை,45: இவர்களுக்குள் பாதை தகராறு நீண்ட நாட்களாக உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பிரச்னைக்குரிய பாதை வழியாக ஏழுமலை டிராக்டர் ஓட்டிச் சென்றார். அதனை சேகர் தடுத்து தகராறு செய்தார். அதன் காரணமாக அன்று மாலை 6:00 மணிக்கு ஏழுமலை, அவரது மகன்கள் கிருஷ்ணன்,20; அரவிந்த்,19; ஆகியோர் வீடு புகுந்து சேகர் மற்றும் சங்கரை கத்தியால் வெட்டினர்.
அதில் கழுத்தில் வெட்டுபட்ட சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தலையில் வெட்டுபட்ட சங்கர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து, ஏழுமலை அவரது மகன்கள் கிருஷ்ணன், அரவிந்த் ஆகியோரை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.