/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் - லாரி மோதல் தந்தை, மகள் பலி
/
பைக் - லாரி மோதல் தந்தை, மகள் பலி
ADDED : நவ 19, 2025 06:41 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே, மகளை பைக்கில் கல்லுாரிக்கு அழைத்து சென்றபோது லாரி மோதி, தந்தை, மகள் இருவரும் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், துத்திப்பட்டை சேர்ந்தவர் வெங்கடேசன், 48; தாண்டவ சமுத்திரகுப்பம் கிராம உதவியாளராக பணிபுரிந்தார். இவரது மகள் சூரியபிரியா, 18; புதுச்சேரியில் தனியார் கல்லுாரி ஒன்றில் நர்சிங் முதலாமாண்டு படித்தார்.
நேற்று காலை, 5:00 மணிக்கு, தன் மகளை கல்லுாரி பஸ்சில் ஏற்றி அனுப்புவதற்காக, 'ஸ்பிளண்டர்' பைக்கில், விழுப்புரத்திற்கு மகளுடன் வந்து கொண்டிருந்தார். கஞ்சனுார் அடுத்த பூண்டி பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, எதிரே முண்டியம்பாக்கத்தில் இருந்து செஞ்சி நோக்கி உர மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி, வெங்கடேசன் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி தந்தை, மகள் இருவரும் இறந்தனர். கஞ்சனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

