/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வருமான வரித்துறை ஊழியர்கள் சார்பில் சம்மேளன நாள் விழா
/
வருமான வரித்துறை ஊழியர்கள் சார்பில் சம்மேளன நாள் விழா
வருமான வரித்துறை ஊழியர்கள் சார்பில் சம்மேளன நாள் விழா
வருமான வரித்துறை ஊழியர்கள் சார்பில் சம்மேளன நாள் விழா
ADDED : பிப் 13, 2024 05:31 AM

விழுப்புரம்: விழுப்புரம் வருமான வரித்துறை அலுவலகத்தில், ஊழியர்கள் சம்மேளன நாள் விழா நடந்தது.
கிளைத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
கிளைச் செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார். வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளன தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல செயலாளர் கோவிந்தன் சங்கக் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், வருமான வரித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
கிளை பொருளாளர் தென்னவன் நன்றி கூறினார்.