/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு நியாயவிலை கடைகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
/
கூட்டுறவு நியாயவிலை கடைகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
கூட்டுறவு நியாயவிலை கடைகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
கூட்டுறவு நியாயவிலை கடைகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 16, 2025 11:10 PM

திண்டிவனம்; ரேஷன் கடைகளில் எடை போடுவதற்கு புதிய நடைமுறையை கொண்டு வருவதற்கு ஊழியர்கள் தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திண்டிவனம் செஞ்சி ரோட்டிலுள்ள மண்டபத்தில், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு நியாயவிலை கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது.
கூட்டத்திற்கு, கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகி தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் வெங்கட்ராயலு, சரவணன், முத்துக்குமார், ஆனந்து, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ். மிஷினுடன் எடைபோடும் தராசு இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும், நுகர்பொருள் வாணிப குடோனிலிருந்து ரேஷன் கடைகளுக்கு சரியான எடை அளவில் பொருட்களை அனுப்ப வேண்டும்.
பி.ஓ.எஸ்.மிஷினில் இணையதளம் வேகம் குறைவாக இருப்பதால், பணியாளர்கள் மொபைல்போனை பயன்படுத்துவதால், ரூ.500 மாதந்தோறும்கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.