/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்
/
வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்
ADDED : டிச 11, 2024 05:00 AM

செஞ்சி : விழுப்புரம் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் செஞ்சி சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுக் குழு கூட்டம் செஞ்சியில் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செஞ்சி தலைவர் சங்கர், மாநில துணைத் தலைவர்கள் பிரகாஷ், பிரேம்நாத், இணைச் செயலாளர்கள் யாசின் மவுலானா, அன்சர் பாஷா முன்னிலை வகித்தனர். செயலாளர் சுரேஷ் வரவேற்றார்.
மாவட்ட பொருளாளர் நிர்மல், செஞ்சி பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் ஆண்டு அறிக்கை வாசித்தனர்.
மாவட்ட துணைத்தலைவர்கள் வெங்கடேஷ், முபாரக் அலி, வெங்கடேசன், சேகர், செயலாண்மை குழு தலைவர் சையத் ஆதம் வாழ்த்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., விதித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும்.
இதற்காக விழுப்புரத்தில் நடக்கும் போராட்டத்தில் வணிகர்கள் திரளாக பங்கேற்பது.
செஞ்சியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு நிதியுதவி வழங்கிய அனைத்து வர்த்தகர்களுக்கும் நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

