/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு
/
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு
ADDED : ஜன 08, 2024 05:28 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கிளைத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் புருஷோத்தமன், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், துணைச் செயலாளர்கள் பிரபு, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாண்டுரங்கன் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், மாநில இணைச் செயலாளர் யாசின் மவுலானா, விழுப்புரம் சேம்பர் ஆப் காமர்ஸ் பி.ஆர்.ஒ., அகிலன், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தீயணைப்பு அலுவலர் ராஜவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் 30ம் தேதி திருவெண்ணைநல்லுார் வருகை தரும் மாநிலத் தலைவர் விக்கிரம ராஜாவுக்கு வரவேற்பு அளிப்பது, திருவெண்ணெய்நல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு நிரந்தர இடம் அமைத்துக் கொடுக்க வேண்டும், திருவெண்ணெய்நல்லுார் மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி கூடுதல் மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.