/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒரு மணி நேரம் வேலைநிறுத்த போராட்டம்
/
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒரு மணி நேரம் வேலைநிறுத்த போராட்டம்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒரு மணி நேரம் வேலைநிறுத்த போராட்டம்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒரு மணி நேரம் வேலைநிறுத்த போராட்டம்
ADDED : ஏப் 26, 2025 03:58 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை 5:00 மணிக்கு நடந்த போராட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் சங்கரலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம் புஷ்பகாந்தன், பாரதிராஜா, வள்ளல்பாரி, நில அளவையர் அலுவலர் சங்கம் மகேஷ்வரன், முருகன் கோரிக்கை விளக்க உரையாற்றினர். போராட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில், வருவாய்த்துறையினருக்கான சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திண்டிவனம்
திண்டிவனத்தில், வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாநிலம் தழுவிய அளவில் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து, தாலுகா அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, தலைமையிடத்து துணை தாசில்தார் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். தலைமை சர்வேயர் தேவக்குமார் , வி.ஏ.ஓ., சங்க வட்டார தலைவர் சவுந்தர்ராஜன், கேசவன், ஜெயபிரகாஷ், மலையான் ,கிராம உதவியாளர் சங்க நிர்வாகி ரவி உட்பட விக்கிரவாண்டி தாலுகாவைச் சேர்ந்த சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் 218 பேர் பங்கேற்றனர்.