ADDED : ஜூன் 17, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : மரக்காணம் அடுத்த அனுமந்தை கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கரை ஒதுங்கிய பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை மீனவ கிராமம் கடற்கரையில் 50 வயது மதிக்கதக்க பெண் சடலம் நேற்று காலை கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் மரக்காணம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண் பிரேதத்தை மீட்டு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்த பெண் யார் எப்படி இறந்தார் என்ற விபரம் தெரியவில்லை. மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.