ADDED : ஜூலை 03, 2026 03:26 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அருகே பில்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 34; இவரது மனைவி ஜெயா, 31; இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 23ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜெயா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகாரளித்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
