/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி பலி
/
மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி பலி
ADDED : பிப் 23, 2024 11:50 PM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கரும்பு தோட்டத்தில், மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கம் பழைய காலனி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி கலைவாணி, 26; விவசாய கூலித் தொழிலாளி.
இவர், நேற்று காலை அருகே உள்ள எருமணந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது நிலத்தில், உளுந்து அறுவடை பணிக்குச் சென்றிருந்தார்.
அப்போது, இயற்கை உபாதை கழிக்க அருகே உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றார். அங்கு, அறுந்து தொங்கிய மின் கம்பி கழுத்தில் பட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத் திலேயே இறந்தார். இறந்த கலைவாணிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.