ADDED : ஆக 24, 2025 10:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் மறைந்த குருஜி தொல்காப்பிய ரங்கதாஸ் படத்திறப்பு விழா நடைபெற்றது.
பஜனை மண்டலி தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். மறைந்த குருஜி தொல்காப்பிய ரங்கதாஸ் படத்தை, அரசமங்கலம் வெங்கடேஷ்பாபு சுவாமிகள் திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளராக வண்டிமேடு அபிநவ மந்த்ராலயா மாணிக்கம் கலந்து கொண்டார். வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் வாழ்த்தி பேசினார்.
இதற்கான ஏற்பாடுகளை குரு ஜி தொல்காப்பிய ரங் கதாஸ் குடும்பத்தார் விஜயலட்சுமி தொல்காப்பியன், திருவள்ளுவன், கபிலன், வேல்முருகன், ரஜினிபிரியா மற்றும் ஸ்ரீ சப்தகிரி பஜனா மண் டலி பாகவதர்கள் செய்திருந்தனர்.