தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாவட்டத்தில் பூத் அலுவலர்களுக்கு இறுதி கட்ட பயிற்சி வகுப்பு  

 மாவட்டத்தில் பூத் அலுவலர்களுக்கு இறுதி கட்ட பயிற்சி வகுப்பு  

 மாவட்டத்தில் பூத் அலுவலர்களுக்கு இறுதி கட்ட பயிற்சி வகுப்பு  


ADDED : ஏப் 22, 2026 10:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 10:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தலை யொட்டி 2,165 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தது.

சட்டசபை தேர்தலை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 2,165 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, சட்டசபை தொகுதி வாரியாக ஏற்கனவே 2 கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதையடுத்து, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிகட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் நடைபெற்றது.

இதில், விழுப்புரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 336 ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான இறுதிகட்ட பயிற்சி வகுப்பு நேற்று விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்தது.

இந்த பயிற்சியை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன் துவக்கி வைத்து பயிற்சி அளித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் யுவராஜ், கற்பகம் முன்னிலை வகித்தனர்.

இதில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் கருவிகளை கையாளும் விதம் குறித்தும், ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற வேண்டிய விதம், தேர்தல் விதிகளை கடைபிடிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

அதே போல், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட 320 ஓட்டுச்சாவடி மையங்கள், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட 277 ஓட்டுச்சாவடி மையங்கள், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட 293 ஓட்டுச்சாவடி மையங்கள், வானுார் தொகுதிக்கு உட்பட்ட 299 ஓட்டுச்சாவடி மையங்கள், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட 310 ஓட்டுச்சாவடி மையங்கள், திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட 330 ஓட்டுச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கும் இறுதிகட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 2,165 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இறுதிகட்ட பயிற்சி வகுப்பு முடிந்ததும் யார், யார் எந்தெந்த ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் பணியாற்றுவது என்பதற்கான பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணை, அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழங்கப்பட்டது.

பணி ஆணையை பெற்று கொண்டோர் ஓட்டுச்சாவடி மையங்களுக்கு நேற்று மாலை சென்று தங்கினர். முன்னதாக, இந்த பயிற்சியின் போது முன்பே தபால் ஓட்டுச்சீட்டு பெற்று பதிவு செய்யாதவர்கள் நேற்று தங்களின் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us