sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

7 சட்டசபை தொகுதிகளில் இறுதி வாக்காளர்கள்  15,86,653: விழுப்புரம் மாவட்டத்தில் 11,845 பேர் நீக்கம்

/

7 சட்டசபை தொகுதிகளில் இறுதி வாக்காளர்கள்  15,86,653: விழுப்புரம் மாவட்டத்தில் 11,845 பேர் நீக்கம்

7 சட்டசபை தொகுதிகளில் இறுதி வாக்காளர்கள்  15,86,653: விழுப்புரம் மாவட்டத்தில் 11,845 பேர் நீக்கம்

7 சட்டசபை தொகுதிகளில் இறுதி வாக்காளர்கள்  15,86,653: விழுப்புரம் மாவட்டத்தில் 11,845 பேர் நீக்கம்


UPDATED : பிப் 24, 2026 06:20 AM

ADDED : பிப் 24, 2026 05:06 AM

Google News

UPDATED : பிப் 24, 2026 06:20 AM ADDED : பிப் 24, 2026 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் 'சிறப்பு தீவிர திருத்தம் 2026' இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 7 லட்சத்து 83 ஆயிரத்து 288 ஆண் வாக்காளர்கள், 80 லட்சத்து 3 ஆயிரத்து 154 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 15 லட்சத்து 86 ஆயிரத்து 653 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்தது.

இதில், 1,970 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், 198 ஓட்டுச்சாவடி மேற்பார்வையாளர்கள், 7,453 ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள், தன்னார்வர்கள் உட்பட 2,245 பேர் இணைந்து சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதியின் படி, 8 லட்சத்து 49 ஆயிரத்து 236 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 78 ஆயிரத்து 11 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 17 லட்சத்து 27 ஆயிரத்து 490 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

தொடர்ந்து, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 நடைபெற்றதற்குப் பின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்தாண்டு டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 377 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 80 ஆயிரத்து 42 பெண் வாக்காளர்கள், 206 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 44 ஆயிரத்து 625 வாக்காளர்கள் இருந்தனர்.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 (எஸ்.ஐ.ஆர்.,) கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு, வாக்காளர்கள் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில், முகவரியில் வசிக்காத வாக்காளர்கள், இடமாற்றம் செய்த வாக்காளர்கள், இதர வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்கள், வாக்காளர்களின் பெயர் நீக்கம் ஆகிய பணிகள் நடைபெற்றது.

அதன்படி, மாவட்டத்தில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 865 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இந்த பணிகள் முடிந்து கடந்த ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று, விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டார். அதில் 11 ஆயிரத்து 845 வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 53 ஆயிரத்து 873 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியலில், 7 லட்சத்து 83 ஆயிரத்து 288 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 3,154 பெண் வாக்காளர்கள், 211 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 86 ஆயிரத்து 653 பேர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் 1970 ஓட்டுச்சாவடி மையங்களும், அதில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள பிரிக்கப்பட்டு தற்போது 2,166 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளது.

நிகழ்ச்சியில், சப் கலெக் டர்கள் ஆகாஷ், ஆனந்த்குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜூ, தனி தாசில்தார் (தேர்தல்) கணேஷ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us