ADDED : செப் 24, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதியில், 10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., நிதியுதவி வழங்கினார்.
காணை ஒன்றியம், மேல்காரணை மற்றும் கஞ்சனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பில், முதல் மூன்று இடங்களை பிடித்த கிராமப்புற மாணவர்கள், 7 பேரை அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தனது அலுவலகத்திற்கு வரவழைத்தார்.
அவர்களது மேற்படிப்பிற்கு உதவியாக, தனது சொந்த செலவில் ஒவ்வொருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வில் சி.இ.ஓ., அறிவழகன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் எட்வின் ஜோசப், முருகன், கல்வி மேலாண்மை குழு முருகன், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.