/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி
/
விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி
விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி
விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி
ADDED : நவ 03, 2024 04:41 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே நடந்த சாலை விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும் பத்திற்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் மதுரா, எரிச்சனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 27; இவர் மதுராந்தகம் காவல் நிலையத்தில் போலீஸ் காரராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 27ம் தேதி நடந்த சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி 29ம் தேதி இறந்தார்.
நேற்று மதியம் 1:00 மணியளவில் அமைச்சர் பொன்முடி, அவரது இல்லத்திற்குச் சென்று சத்திய மூர்த்தி மனைவி சரிதா விடம், முதலமைச்சர் நிவாரண நிதி உதவியாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கி ஆறுதல் கூறினார்.
பின், நிருபர்களிடம் கூறுகையில், 'பணியில் இருக்கும் போது சத்தியமூர்த்தி இறந்தார்.
அதனையொட்டி அவரது மனைவி சரிதாவிற்கு அரசு பணி வழங்கப் படும்' என்றார்.
லட்சுமணன் எம்.எல்.ஏ., கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக் சிவாச், ஆர்.டி.ஓ., முருகேசன், டி.எஸ்.பி., நந்தகுமார், தாசில்தார் யுவராஜ், முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி, ஒன்றிய செயலாளர் ரவிதுரை, இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.