/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அருகே தீ விபத்து ரூ.2.5 லட்சம் பொருட்கள் சேதம்
/
விழுப்புரம் அருகே தீ விபத்து ரூ.2.5 லட்சம் பொருட்கள் சேதம்
விழுப்புரம் அருகே தீ விபத்து ரூ.2.5 லட்சம் பொருட்கள் சேதம்
விழுப்புரம் அருகே தீ விபத்து ரூ.2.5 லட்சம் பொருட்கள் சேதம்
ADDED : அக் 13, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஏற்பட்ட மின் கசிவால், கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.
விழுப்புரம் அடுத்த கருங்காலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 47; விவசாயி. இவரது கூரை வீட்டில், நேற்று மதியம் 3:15 மணியளவில், திடீரென அதிக மின் அழுத்தம் ஏற்பட்டது.
இதனால், வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மிஷன், 'டிவி', பேன் உள்ளிட்ட மின் சாதனங்கள் தீ பிடித்து வீடு முழுவதும் எரிந்தது.
மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஜமுனா ராணி தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.