sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 தீயணைப்பு துறை அலுவலக சாலை கிடப்பில் போட்டதால் ஊழியர்கள் அவதி

/

 தீயணைப்பு துறை அலுவலக சாலை கிடப்பில் போட்டதால் ஊழியர்கள் அவதி

 தீயணைப்பு துறை அலுவலக சாலை கிடப்பில் போட்டதால் ஊழியர்கள் அவதி

 தீயணைப்பு துறை அலுவலக சாலை கிடப்பில் போட்டதால் ஊழியர்கள் அவதி


ADDED : ஜன 07, 2026 05:51 AM

Google News

ADDED : ஜன 07, 2026 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் தீயணைப்புத் துறை அலுவலக சிமென்ட் சாலை பாதியில் விடப்பட்டதால் ஊழியர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், அரசு சுற்றுலா மாளிகை அருகே மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் செல்லும் 200 மீட்டர் தொலைவிலான சாலை நீண்டகாலமாக போடப்படாமல் ஜல்லிகள் கொட்டிக் கிடந்த நிலையில், கடந்த மாதம் சிமென்ட் சாலை போடும் பணி நடந்தது.

தீயணைப்புத் துறை அலுவலகம் பகுதியிலிருந்து, வெளியே மெயின் ரோடு வரை சாலை அமைத்து வந்த நிலையில், முழுதும் முடிக்காமல், முகப்பு பகுதியில் மட்டும் 10 மீட்டர் தொலைவிற்கு கிடப்பில் போட்டுள்ளனர்.

சாலை அமைத்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டுள்ளதால், தீயணைப்பு மாவட்ட அலுவலகத்தில் நின்றிருந்த 2 தீயணைப்பு வாகனங்கள் உள்ளே எடுத்துச்செல்ல முடியாமல் வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறை அலுவலர்கள், ஊழியர்களின் வாகனங்களும் செல்ல முடியாமல் நடந்து செல்கின்றனர்.

நீண்ட காலத்திற்கு பிறகு சுத்தம் செய்து சாலை அமைத்தார்கள். ஆனால், முழுதும் முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால், வாகனங்களை கொண்டு செல்ல முடியாமல் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிடப்பில் போடப்பட்ட மீதமுள்ள சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us