/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
3 மாதங்களில் 228 பாம்புகள் மீட்பு தீயணைப்பு துறை நடவடிக்கை
/
3 மாதங்களில் 228 பாம்புகள் மீட்பு தீயணைப்பு துறை நடவடிக்கை
3 மாதங்களில் 228 பாம்புகள் மீட்பு தீயணைப்பு துறை நடவடிக்கை
3 மாதங்களில் 228 பாம்புகள் மீட்பு தீயணைப்பு துறை நடவடிக்கை
ADDED : ஏப் 21, 2025 04:42 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் தீயணைப்பு வீரர்களால், கடந்த மூன்றரை மாதங்களில், 228 பாம்புகள் பிடிக்கப்பட்டு, காப்புக் காட்டில் விடப்பட்டுள்ளன.
திண்டிவனம் நகரில் புதிது புதிதாக மனைப் பிரிவுகள் உருவாகி, குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருகின்றன. இந்த குடியிருப்புகள் மத்தியில் ஏராளமான காலி மனைகள் உள்ளன. காலி மனைகள் புதர் மண்டி, மழை நீர் தேங்கிக் கிடப்பதோடு, பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால், புதர்களில் பதுங்கி இருக்கும் பாம்புகள் வெளியே வர துவங்கி உள்ளன.
திண்டிவனம் நகர் மற்றும் அதைச்சுற்றியுள்ள வீடுகள், தோட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு வந்த அழைப்பில், 78 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி மாதத்தில், 64 பாம்புகளும், மார்ச் மாதத்தில் 56 பாம்புகளும் மீட்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் நேற்று முன்தினம் வரை 30 பாம்புகள் மீட்கப் பட்டுள்ளன. இதில் 4 முதல் 5 அடி நீளமுள்ள சாரை, 4 அடி நீள நாகப்பாம்பு, கட்டு விரியன் உள்ளிட்ட பாம்புகள் பிடிபட்டுள்ளன.
வெயில் காலத்தில் ஈரப்பதத்தை தேடி பாம்புகள் வருவது வழக்கம். வறட்சி காரணமாகவும், இறை தேடியும் அதிகளவில் பாம்புகள் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக வீடுகள், தோட்டங்களுக்கு அதிகளவில் பாம்புகள் படையெடுக்கிறது.
பாம்புகளை கண்டால், பொதுமக்கள் அச்சப்படாமல், உடனடியாக திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு 04147 222101 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் என தீயணைப்பு நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

