/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டாசு விற்பனை உரிமம் விண்ணப்பம் வரவேற்பு
/
பட்டாசு விற்பனை உரிமம் விண்ணப்பம் வரவேற்பு
ADDED : அக் 05, 2024 04:10 AM
விழுப்புரம், : தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விரும்புவோர், அரசு பொது இ-சேவை மையத்தில் உரிய ஆவணங்களோடு சென்று இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்போர் மனுதாரரின் மனு, படிவம் ஏஇ-5ல் பூர்த்தி செய்த விண்ணப்பம், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருந்தால் அதற்கான பத்திர நகல், உரிமை கோரும் இடம் வாடகை கட்டடம் என்ற இடத்தின் கட்டட உரிமையாளரிடம் 20 ரூபாய்க்கான முத்திரைத் தாளில் பெற்ற அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், நோட்டரி பப்ளிக் கையெழுத்து பெற வேண்டும்.
மனுதாரரின் முகவரி ஆதாரம், இந்த நிதியாண்டில் வீட்டுவரி செலுத்திய ரசீது, பாஸ்போர்ட் போட்டோ 2, தற்காலிக வெடிபொருள் உரிமை கோரும் இடத்தின் அசல் வரைபடங்கள், உரிமம் கட்டணம் 600 ரூபாயை உரிய அரசு கணக்கில் செலுத்தி அதற்கான செலுத்து சீட்டு பெற வேண்டும்.
மாவட்டத்தில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை யொட்டி, தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பித்தோர், அனைத்து சான்றிதழ்களையும் இ-சேவை மையத்தில் கொடுத்து பதிவேற்றம் செய்திட வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.