/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதலுதவி சிகிச்சை விழிப்புணர்வு
/
முதலுதவி சிகிச்சை விழிப்புணர்வு
ADDED : அக் 14, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் இ.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இருதய சுவாச உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜோன் சார்லஸ் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் முரளிதரன் தலைமையுரையாற்றினார். இந்திய மருத்துவ சங்க கிளைச் செயலாளர் சவுந்தர்ராஜன், பொருளாளர் திருமாவளவன், டாக்டர் சரண்யா ஆகியோர் இருதயம், சுவாசம் பற்றிய விளக்க உரை மற்றும் செயல் முறை பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
வணிகவியல் துறை மாணவி சிவசக்தி நன்றி கூறினார்.