/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நான்கு வழிச்சாலை திட்டத்தில் முதல் ஊராட்சியின் பெயர் 'மிஸ்சிங்'
/
நான்கு வழிச்சாலை திட்டத்தில் முதல் ஊராட்சியின் பெயர் 'மிஸ்சிங்'
நான்கு வழிச்சாலை திட்டத்தில் முதல் ஊராட்சியின் பெயர் 'மிஸ்சிங்'
நான்கு வழிச்சாலை திட்டத்தில் முதல் ஊராட்சியின் பெயர் 'மிஸ்சிங்'
ADDED : ஜன 12, 2024 12:14 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே துவங்கும் நான்கு வழிச்சாலை திட்டத்தில், முதல் ஊராட்சியின் பெயர் பலகையும், நிழற்குடையும் விடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் புதிய நான்கு வழிச்சாலை திட்டப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், முதல் கட்டமாக விழுப்புரம் அடுத்த ஜானகிரபுரம் பை பாஸ் சந்திப்பில் துவங்கி புதுச்சேரி வரை சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வரை சாலைப்பணிகள் முடிந்து அந்தந்த பகுதியில் ஊர்களில் பெயர்கள், பயணிகள் நிழற்குடை, கி.மீ., குறிக்கும் பெயர் பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டப்பணி தொடக்கப் புள்ளியான விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் அந்த ஊராட்சியான கண்டமானடி கிராமத்தின் பெயர் பலகை, பயணிகள் நிழற்குடை வைக்கப்படாமல் விடுபட்டுள்ளது.
அதன் அடுத்து வரும் ஊராட்சிகளின் பெயர் பலகை, நிழற்குடைகள் வைத்துள்ள நிலையில், இத்திட்டம் தொடங்கும் ஜானகிபுரம் ரவுண்டானா மேம்பாலம் முதல் ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் சாலை வரை கண்டமானடி ஊராட்சி பகுதிகளில் தான் உள்ளது.
ஆனால், அந்த ஊரை குறிப்பிடும் பெயர் பலகை, நிழற்குடை வைக்காமல் விட்டுள்ளனர். இந்த நான்கு வழிச் சாலை பணிக்கு, கண்டமானடி கிராமத்தில் தான் பிளாண்ட் அமைத்து பல ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகிறது.
இது குறித்து, அந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில், நகாய் திட்ட மேலாளரை சந்தித்தும், நகாய் அலுவலகத்துக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பி, ஊர் வழிகாட்டி பெயர் பலகை வைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

