/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் கல்லுாரியில் முதல்கட்ட கலந்தாய்வு
/
வானுார் கல்லுாரியில் முதல்கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூன் 10, 2025 10:13 PM

வானுார்; வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதல் கட்ட கலந்தாய்வு நடந்தது.
கல்லுாரியில் 2025-2026ம் கல்வியாண்டிற்கான இளங்கலை பிரிவில் 1வது ஷிப்ட்டில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல், தாவரவியல் மற்றும் 2ம் ஷிப்டில் வணிகவியல், கம்ப்யூட்டர் அறிவியல் ஆகிய பாடப்பிரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
பல்வேறு பாடப்பிரிவில் 40 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, கலந்தாய்வு நிறைவில் சேர்க்கைக்கான கடிதத்தை கல்லுாரி முதல்வர் வில்லியம், வழங்கினார்.
நிகழ்ச்சியில் சேர்க்கைக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர். இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 12ம் தேதி நடக்கிறது. மாணவர்களின் சேர்க்கை தொடர்பாக கல்லூரி முதல்வரை அனைத்து வேலை நாட்களிலும் சந்திக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.