ADDED : ஏப் 05, 2026 05:58 PM
செஞ்சி: முதல் தலைமுறையாக ஓட்டு போட உள்ள இளைஞர்கள் மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
' மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த முதன் முறையாக ஓட்டு போட உள்ள இளைஞர்கள் விஜயபாஸ்கர், ராம்குமார், மாற்று கட்சியை சேர்ந்த சேர்ந்த தினேஷ் குமார் மற்றும் கிஷோர் உள்ளிட்ட 15 பேர் தி.மு.க., மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர்.
அவர்களுக்கு, மஸ்தான் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயபாரத்குமார், தொண்டரணி பாஷா ஆகியோர் உடன் இருந்தனர்.
மேல்மலையனுார் ஒன்றியத்தை சேர்ந்த புதிய வாக்காளர்கள் மற்றும் மாற்று கட்சி இளைஞர்கள் தி.மு.க., மாவட்ட செயலாளர் மஸ்தான் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
