/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மீன்வளத்துறை மானிய திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
மீன்வளத்துறை மானிய திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஏப் 25, 2025 05:01 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மீன்வளத்துறை சார்பில் மானிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திகுறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மீன் வளர்ப்பு திட்டங்களான, புதிய மீன் வளர்ப்பு குளம் அமைத்தல், புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைத்தல். உள்ளீட்டு மானியம் வழங்குதல், பயோபிளாக் முறையில் மீன்வளர்ப்பு, நீரின் மறுசுழற்சி முறை மீன்வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு திட்டங்கள் மற்றும் மீன் விற்பனை குளிர்காப்பு வாகனம்.
ஐஸ் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் போன்ற பல திட்டங்கள், பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு 90 சதவீதம் அரசு மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே, இத்திட்டங்களில் பயனடைய விரும்பும், பழங்குடியின மீன் வளர்ப்பு விவசாயிகள், விழுப்புரம் மருத்துவமனை சாலையில் உள்ள, மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.