/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நடுக்குப்பம் சுடுகாடு பிரச்னை மீனவ பஞ்சாயத்தார் ஆலோசனை
/
நடுக்குப்பம் சுடுகாடு பிரச்னை மீனவ பஞ்சாயத்தார் ஆலோசனை
நடுக்குப்பம் சுடுகாடு பிரச்னை மீனவ பஞ்சாயத்தார் ஆலோசனை
நடுக்குப்பம் சுடுகாடு பிரச்னை மீனவ பஞ்சாயத்தார் ஆலோசனை
ADDED : ஏப் 21, 2025 04:44 AM

விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே படகு நிறுத்துமிடம், சுடுகாடு பிரச்னை குறித்து, மீனவ பஞ்சாயத்தார் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. கிராமத்தையொட்டி, ஆதிதிராவிட மக்களுக்கான சுடுகாடு உள்ளது.
கடல் அரிப்பின் காரணமாக, படகுகளை நிறுத்துவதற்கு நடுக்குப்பம் மீனவர்களுக்கு போதிய இடமில்லை. இதனால், அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் படகுகளை நிறுத்தி வருகின்றனர்.
ஆதிதிராவிட மக்கள், சுடுகாட்டில் உடலை புதைப்பதற்கு வரும்போது, படகுகள் இடையூறாக இருப்பதாக, குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், இறுதி சடங்கின்போது, போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சுடுகாட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக, நடுக்குப்பம் மீனவ பஞ்சாயத்து சார்பில், கிராமத்தில் நேற்று காலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம், கடலுார், புதுச்சேரி மீனவ பஞ்சாயத்து பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கடலில் இருந்து 200 மீட்டர் வரை மீனவர்களுக்கு சொந்தம். படகுகளை அங்கு நிறுத்த வேண்டியிருப்பதால், சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்தனர்.

