/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகை கடையில் கொள்ளை முயற்சி ஐந்து பேர் திண்டிவனத்தில் கைது
/
நகை கடையில் கொள்ளை முயற்சி ஐந்து பேர் திண்டிவனத்தில் கைது
நகை கடையில் கொள்ளை முயற்சி ஐந்து பேர் திண்டிவனத்தில் கைது
நகை கடையில் கொள்ளை முயற்சி ஐந்து பேர் திண்டிவனத்தில் கைது
ADDED : நவ 20, 2025 02:47 AM

திண்டிவனம்: பெரம்பலுார் அருகே நகைக்கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஐந்து பேரை திண்டிவனத்தில் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், பாடாலுாரில் தமிழரசன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. கடந்த 13ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
அப்போது நள்ளிரவில், முகமூடி அணிந்த ஐந்து பேர் காரில் வந்து, கடை காவலாளி ஜெயராமனை கட்டிப்போட்டு, நகைக்கடையின் பூட்டை உடைத்தனர். கடையிலிருந்து எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளை கும்பல், காரில் தப்பியது.
இச்சம்பவம் குறித்து பாடாலுார் போலீசார் வழக்கு பதிந்து, கடையில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளையர்கள் தப்பிச்சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து, தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், திண்டிவனம் - சென்னை சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் காலை, கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் நின்றிருந்தது. காரில் யாரும் இல்லாததால், தனிப்படை போலீசார் துாரத்தில் இருந்தபடி கண்காணித்தனர்.
அப்போது, ஒரு மணி நேரத்துக்கு பின், ஐந்து பேர் அந்த கார் அருகே வந்தனர். அவர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், பெரம்பலுார் அருகே நகைக்கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள், செஞ்சி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்களை கைது செய்த திண்டிவனம் போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

