தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இருவரை கொலை செய்ய திட்டம்: ஆயுதங்களுடன் 5 பேர் கைது 

இருவரை கொலை செய்ய திட்டம்: ஆயுதங்களுடன் 5 பேர் கைது 

இருவரை கொலை செய்ய திட்டம்: ஆயுதங்களுடன் 5 பேர் கைது 


UPDATED : ஜூன் 09, 2026 08:09 PM

ADDED : ஜூன் 09, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 08:09 PM ADDED : ஜூன் 09, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வானுார்: கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 2 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த நாவற்குளம் முந்தரிதோப்பில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக ஜூன் 8 ஆரோவில் போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடன், இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதும், அங்கிருந்த ஒரு கும்பல் தப்பியோடியது. போலீசார் 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில், கோட்டக்குப்பம் அமீர் அம்ஜான் மகன் முகமது ஆசிக், 22; முகமது இப்ராஹிம் மகன் இர்பான், 19; பக்கீர் முகம்மது மகன் அகமது ஹசேன், 27; முகமது யாசின் மகன் அகமது இம்ரான், 18; அனுமந்தை முருகேசன் மகன் குணசீலன், 24; என தெரிந்தது.

கடந்த ஜனவரி மாதம் சின்ன கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரவுடியான அப்பு, 24; என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.

இந்த வழக்கில், புதுச்சேரி லாஸ்பேட்டை விக்கி, தமிழ்மணி உட்பட 10க்கும் மேற்பட்டோரை கோட்டக்குப்பம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில், ஜாமினில் வெளியே வந்த விக்கி, தமிழ்மணி ஆகிய இருவரும், ஜூன் 8 கொலை வழக்கு தொடர்பாக வானுார் கோர்ட்டில் ஆஜராக இருந்தனர். இந்த தகவலை அறிந்து, இருவரையும் வெட்டிக் கொலை செய்ய 5 பேரும் தயார் நிலையில் இருந்தது தெரிய வந்தது.

உடன், போலீசார் 5 பேரையும் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான சிலரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us