UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 03:56 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்துபேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த ராம்பாக்கம் ஏரிக்கரையில் பயிற்சி டி.எஸ்.பி., சதீஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, புதுச்சேரியை சேர்ந்த சிங்காரவேல், வினோத் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த பத்து, பாஸ்கரன், நடேசன் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
வளவனுார் போலீசார் சிங்காரவேல் உள்ளிட்ட ஐந்துபேர் மீது வழக்குப் பதிந்து நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
