/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு தரப்பினர் தகராறு ஐந்து நபர்கள் கைது
/
இரு தரப்பினர் தகராறு ஐந்து நபர்கள் கைது
ADDED : ஜன 31, 2024 05:39 AM
விழுப்புரம் :L விழுப்புரத்தில் இரு தரப்பினர் தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 5 பேரை கைது செய்தனர்.
விழுப்புரம், திடீர்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மணிகண்டன்,32; டாடா ஏஸ் டிரைவர். இவரும், பக்கத்து வீட்டில் சேட்டு மகன்கள் கலிபுல்லா,29; இன்சியாஸ்,28; மன்சூர் மகன் சமான்,28; ஆகியோர் வசிக்கின்றனர். மணிகண்டன் நேற்று முன்தினம் தனது டாடா ஏஸ் வாகனத்தை சேட்டுவின் காலி மனையில் நிறுத்தியுள்ளார். இதையடுத்து கலிபுல்லா உட்பட மூவரும் சேர்ந்து, மணிகண்டனிடம் ஏன் எங்க இடத்தில் வண்டியை நிறுத்தினாய் என கேட்டு, வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர்.
இதை, மணிகண்டன், இவரின் தம்பி ராஜ்குமார், மனைவி சுமித்ரா ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த கலிபுல்லா தரப்பினர் மணிகண்டன் உள்ளிட்டோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து, மணிகண்டன் தரப்பை சேர்ந்த ராஜ்குமார்,27; ஆறுமுகம் மகன் சேட்டு,27; ஆகியோர் கலிபுல்லா தரப்பினரை தாக்கினர்.
இருதரப்பு புகார்களின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் 7 பேர் மீது வழக்குப் பதிந்து கலிபுல்லா, இன்சியாஸ், ராஜ்குமார், மணிகண்டன், சேட்டு ஆகியோரை கைது செய்தனர்.