ADDED : மார் 21, 2026 05:02 AM

அ நிறம் | அளவு
செஞ்சி: சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டு போடுவதை உறுதி செய்யும் வகையில் நேற்று செஞ்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கொடி அணி வகுப்பு நடந்தது.
டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ், ஆயுதப்படை டி.எஸ்.பி., ஞானவேல் தலைமை தாங்கினர். செஞ்சி கூட்ரோட்டில் துவங்கி திருவண்ணாமலை ரோடு, சிங்கவரம் சாலை, காந்தி பஜார், விழுப்புரம் சாலை வழியாக அணி வகுப்பு நடந்தது.
இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, சுரேஷ்பாபு, வனஜா, சண்முகம், எல்லை பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் சாய்புதின், துப்பாக்கி ஏந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 32 பேர், மாவட்ட ஆயுதப்படையினர், செஞ்சி உட்கோட்ட போலீசார் 150 பேர் வஜ்ரா வாகனத்துடன் அணி வகுப்பு நடத்தினர்.
