/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முக்குணம் கோவிலில் கொடிமரம் கும்பாபிஷேகம்
/
முக்குணம் கோவிலில் கொடிமரம் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 02, 2025 03:55 AM

செஞ்சி : முக்குணம் சுப்ரமணியர் கோவிலில் கொடிமரம் ஸ்தாபிதம் மற்றும் கும்பாபிஷேக விழா நடந்தது.
செஞ்சி அடுத்த முக்குணம் மலை மீதுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில் புதிதாக 23 அடியில் கலசம் அணிவிக்கப்பட்ட கொடிமரம் (துஜஸ்தம்பம்) பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். 7:30 மணிக்கு கும்ப பிரதிஷ்டை, கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, தொடர்ந்து சிறப்பு ஹோமமும் நடந்தது.
தொடர்ந்து 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடாகி கலச நீர் கொண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பிரம்மோற்சவ விழாவின் துவக்கமாக கொடியேற்றம் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

