தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விமான முன்பதிவு ஆளுமை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

 விமான முன்பதிவு ஆளுமை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

 விமான முன்பதிவு ஆளுமை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : மார் 11, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ள விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதனையொட்டி, தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ள, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி 3 மாதங்கள் நடக்கிறது.

பயிற்சியில் விமான டிக்கெட் முன்பதிவு முறை, வாடிக்கையாளர் சேவை, தொடர்பு திறன், ஆளுமை மேம்பாடு, விமான பாதுகாப்பு நடைமுறைகள், கேபின் குழு பணிகள் குறித்து தொழில்முறை பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சி திருப்பூர் மாவட்டத்தில் அளிக்கப்பட உள்ளது. பயிற்சியை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ், தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கும் வழிவகை செய்யப்படுகிறது.

இந்த பயிற்சி பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூரில் உள்ள விடுதியில் தங்கி பயிலும் வசதி, உணவிற்கான செலவு தாட்கோ மூலம் வழங்கப்படுகிறது. இது பற்றி மேலும் விபரங்கள் பெற, மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, கலெக்டர் அலுவலகம், விழுப்புரம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us