/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறு பாலம் உடைந்ததால் சாலையில் சூழ்ந்த வெள்ளம்
/
சிறு பாலம் உடைந்ததால் சாலையில் சூழ்ந்த வெள்ளம்
ADDED : அக் 24, 2025 03:22 AM

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அருகே, உபரி நீரினால் பாலம் உடைந்து வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
நாரணமங்கலம் கிராமத்தில் மழையால் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சாலை வழியில் அதிகளவில் வெளியேறிய வெள்ளத்தினால் கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட சிறு பாலம் உடைந்தது. இதனால் வெள்ள நீர் அந்த சாலை மற்றும் விவசாய நிலங்களில் குளம் போல் சூழ்ந்தது.
இதனால் அங்குள்ள, 500 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியே வருவதற்கு 5 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

