தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பறக்கும் படை சோதனை ரூ.2 லட்சம் பறிமுதல் 

 பறக்கும் படை சோதனை ரூ.2 லட்சம் பறிமுதல் 

 பறக்கும் படை சோதனை ரூ.2 லட்சம் பறிமுதல் 


ADDED : ஏப் 01, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 07:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே போதுமான ஆவணங்கள் இல்லாமல் பைக்கில் கொண்டு வந்த ரூ.2 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டிவனம் சட்டசபை தொகுதியின் தேர்தல் பறக்கும் படை குழு அலுவலர் காமராஜ் தலைமையில், ஆவணிப்பூர்-கம்பூர் சாலையில் நேற்று முன்தினம் மாலை வாகன தணிக்கை நடந்தது.

அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த சேந்தமங்கலம் கிராமம், ஏரி வாய்க்கால் தெருவை சேர்ந்த ராமு என்பவரை சோதனை செய்தனர். இதில் அவரிடம் போதுமான ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து பறக்கும் படை குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து திண்டிவனம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சப்கலெக்டர் ஆகாஷிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகையை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நீலவேணி, தேர்தல் துணை வட்டாட்சியர் உஷாராணி ஆகியோர் திண்டிவனம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us