/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.1.24 லட்சம் அரிசி மூட்டைகள் பறிமுதல் விக்கிரவாண்டியில் பறக்கும் படை அதிரடி
/
ரூ.1.24 லட்சம் அரிசி மூட்டைகள் பறிமுதல் விக்கிரவாண்டியில் பறக்கும் படை அதிரடி
ரூ.1.24 லட்சம் அரிசி மூட்டைகள் பறிமுதல் விக்கிரவாண்டியில் பறக்கும் படை அதிரடி
ரூ.1.24 லட்சம் அரிசி மூட்டைகள் பறிமுதல் விக்கிரவாண்டியில் பறக்கும் படை அதிரடி
ADDED : மார் 22, 2026 04:37 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட அரிசி முட்டைகள் மற்றும் 1.24 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி டோல்கேட்டில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு அலுவலர் பாரதி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, விழுப்புரத்திலிருந்து விக்கிரவாண்டி நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இன்றி அரிசி 100 சிப்பங்கள் கொண்டு செல்வது தெரியவந்தது. உடன், அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து, தொகுதி தேர்தல் அலுவலர் விஜயாவிடம் ஒப்படைத்தனர்.
ரூ.1.24 லட்சம் பறிமுதல் விக்கிரவாண்டி டோல் கேட்டில் தேர்தல் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு அலுவலர் லோகநாதன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 100 ரூபாய் கொண்டு செல்வது தெரியவந்தது.
விசாரணையில், பனையபுரத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் உரிமையாளர் மாரிமுத்து எனவும் ஏ.டி.எம்.,மில் பணம் செலுத்துவதற்கு எடுத்து செல்வதாக தெரிவித்தார். உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தொகுதி தேர்தல் அலுவலர் விஜயாவிடம் ஒப்படைத்தனர்.
உதவி தேர்தல் அலுவலர் மகாதேவன், தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், சமூக நலதாசில்தார் வேல்முருகன் மண்டல துணை தாசில்தார் விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

