ADDED : மார் 31, 2026 04:20 PM

அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி டோல்கேட்டில் நேற்று முன்தினம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் பாரதி தலைமையில் போலீசார் கொண்ட குழு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கிச் பைக் ஓட்டிச் சென்றவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் அவர் ஆவணமின்றி ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய் கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் விழுப்புரம் பெரியார் தெருவைச் சேர்ந்த சங்கர் என தெரிந்தது.
உடன் பணத்தை பறிமுதல் செய்து, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் ஒப்படைத்தனர்.
