ADDED : ஏப் 18, 2026 03:56 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: உரிய ஆவணமின்றி சரக்கு வாகனத்தில் எடுத்து வந்த 1.5 லட்சம் ரூபாயை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி பரணிதரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணமின்றி ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 720 ரூபாய் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், நாமக்கல்லைச் சேர்ந்த டிரைவர் விக்னேஷ், 24; என்பவர், வீடு கட்டுமான பணிக்கு பயன்படுத்தக்கூடிய பழைய இரும்பு கம்பிகளை புதுச்சேரியில் விற்பனை செய்துவிட்டு வந்ததாக கூறினார்.
ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
