/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீவான கிராமத்திற்கு 'ட்ரோனில்' உணவு வழங்கல்
/
தீவான கிராமத்திற்கு 'ட்ரோனில்' உணவு வழங்கல்
ADDED : டிச 05, 2024 07:00 AM

விழுப்புரம்; வெள்ளம் சூழ்ந்ததால், தீவாகி உணவின்றி தத்தளித்த கிராம மக்களுக்கு போலீசார். 'ட்ரோன்' மூலம் உணவு வழங்கினர்.
தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாரங்கியூர் கிராமம் தனித் தீவாக மாறியது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் கடந்த மூன்று நாட்களாக கடும் அவதிக்குள்ளாகினர்.
அதனை அறிந்த எஸ்.பி., தீபக்சிவாச் உத்தரவின்போரில் போலீசார், ட்ரோன் மூலம் பால் பாக்கெட், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினர்.