/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கனமழையால் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு
/
கனமழையால் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு
ADDED : டிச 01, 2025 05:16 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் டிட்வா புயல் கனமழையையொட்டி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் டிட்வா புயல் கனமழையால், மரக்காணம் ஒன்றியம், அனுமந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாமில் 54 பேரும், செஞ்சி ஒன்றியம், அஞ்சாஞ்சேரி ஊராட்சி சமுதாய கூடத்தில் 40 பேரும், சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 20 பேரும், மயிலம் ஒன்றியம், பாதிராபுலியூர் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் 56 பேரும், வீடூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 38 பேர் உட்பட 5 முகாம்களிலும் 208 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நேற்று கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில் காலை உணவு வழங்கப்பட்டது. மேலும், மரக்காணம் ஒன்றியத்தில் தாழ்வான பகுதியில் வசிக்கும் 1,365 பேருக்கு வீடுகளுக்கே நேரில் சென்று உணவு வழங்கப்பட்டது.
மரக்காணம் ஒன்றியம் அனுமந்தை, கூனிமேடுகுப்பம், மயிலம் ஒன்றியம் பாதிராபுலியூர், வீடூர், வானுார் ஒன்றியம் ஆண்பாக்கம், பொம்மையார்பாளையம், செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலம், அஞ்சாஞ்சேரி ஆகிய 8 ஊராட்சிகளில் மருத்துவ முகாம்கள் நடந்தது.

