/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரோவில் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
/
ஆரோவில் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
ADDED : ஜூலை 04, 2025 01:59 AM

வானூர்: ஆரோவில் பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் போலீசார் 'திடீர்' சோதனையில் ஈடுபட்டனர்.
ஆரோவில் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதி பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, வானூர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்உணவு பாதுகாப்பு அலுவலர் கற்பகம் மற்றும் ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லெனின் ஆகியோர் குயிலாப்பாளையம், இடையஞ்சாவடி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீரென சோதனை நடத்தினர்.
ஒவ்வொரு கடைகளிலும் சாக்கு பை உட்பட சந்தேகப்படும் படியான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த சோதனையில் எந்த குட்கா புகையிலை பொருட்களும் சிக்கவில்லை. குட்கா புகையிலை பொருட்கள் விற்றதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள், கடை உரிமையாளர்களை எச்சரித்து விட்டு வந்தனர்.