/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
' துண்டு' போட்டு காத்திருக்கும் மயிலம் தொகுதிக்கு
/
' துண்டு' போட்டு காத்திருக்கும் மயிலம் தொகுதிக்கு
ADDED : அக் 27, 2025 11:32 PM
மயிலம் தொகுதியில் போட்டியிட 'மாஜி' எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் 'துண்டு' போட்டு காத்திருக்க துவங்கி விட்டனர்.
இதன் விளைவாக தொழிலாளர் நல வாரிய உறுப்பினர், கட்சியின் நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வீடு வீடாக சென்று தீபாவளி பரிசு பெட்டகத்தை வழங்கியுள்ளார்.
மயிலம் தொகுதியில் தி.மு.க.,வில், 'சீட்' பெறுவதில், கட்சி நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, தமிழக அரசு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சிவா, திண்டிவனம் முன்னாள் எம்.எல்.ஏ., வழக்கறிஞர் சேதுநாதன் ஆகியோர் தங்களுக்கு 'சீட்' கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையே தீபாவளியை முன்னிட்டு, மயிலம் தொகுதியில் ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு, சிவா தரப்பில் வீடு வீடாக சென்று தீபாவளி பரிசு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாணியில், தொகுதியில் நிர்வாகிகள் 1,500 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று தீபாவளி பட்டாசு, இனிப்பு உள்ளிட்டவைகளை தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார்.
இத்தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் தமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் 6000 பேரை உறுப்பினராக சேர்த்ததுடன், அதில், 3 பேருக்கு வாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாணியில், தொகுதியை பிடிக்க சிவா தயாராகி வருவதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

