/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெளிநாட்டவர் இறப்பு; போலீசார் விசாரணை
/
வெளிநாட்டவர் இறப்பு; போலீசார் விசாரணை
ADDED : ஜன 31, 2025 07:54 AM
கோட்டக்குப்பம்; கோட்டக்குப்பம் தனியார் கெஸ்ட் ஹவுசில் வெளிநாட்டை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் பிலிப்போ, 47; இவர் விழுப்புரம் மாவட்டடம், கோட்டகுப்பத்தில் உற்பத்தியாகும் ஜி.எம்.டி., என்ற உயர்ரக இத்தாலியன் ஐஸ்கிரீம் கம்பெனியின் ஆலோசகர் ஆவார்.
இவர் நேற்று காலை கோட்டகுப்பத்தில் நடக்க இருந்த ஐஸ்கிரீம் கம்பெனியின் நிர்வாக கூட்டத்தில் பங்கேற்க இருந்தார்.
இதற்காக இத்தாலி நாட்டில் இருந்து இந்தியா வந்த அவர், கடந்த 27ம் தேதி பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்துள்ளார்.
அவரை கம்பெனி ஊழியர் விக்ரம் என்பவர் அழைத்து வந்து, கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுசில் அறை எடுத்து தங்க வைத்தார்.
இந்நிலையில் நேற்று காலை தனக்கு உடல்நிலை சரியில்லை என்று மொபைல் போன் மூலம் நிர்வாகிகளுக்கு தகவல் பகிர்ந்துள்ளார்.
மாலை அவரை அறையில் சென்று பார்ப்பதற்காக நிர்வாகிகள் சென்ற போது அறையின் கதவு உள்பக்கமாக தாழிட்டிருந்தது.
அருகில் உள்ள ஜன்னல் வழியாக கதவைத் திறந்து பார்த்தபோது பிலிப்போ பெட்டில் இறந்துகிடந்தது தெரியவந்தது.
உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மாரடைப்பால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

