/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மானை வேட்டையாடிய 4 பேருக்கு வனத்துறை வலை
/
மானை வேட்டையாடிய 4 பேருக்கு வனத்துறை வலை
ADDED : ஜன 02, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: மானை வேட்டையாடிய நான்கு பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் கிராமத்தில் காப்பு காட்டில் மான்கள் அதிகம் உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் 4 வாலிபர், காப்புக் காட்டில் சென்று ஒரு மானை வேட்டையாடி கொன்றுள்ளனர்.
அதனை ஒருவர் மொபைல் போனில் வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையறிந்த வனத்துறையினர், அடுக்கம் காப்பு காட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மக்களிடம் விசாரணை செய்தனர்.
மேலும், மானை வேட்டையாடிய நான்கு வாலிபர்களை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.

