/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மர சோபாக்களை திருடிய மாஜி பா.ஜ., பிரமுகர் கைது
/
மர சோபாக்களை திருடிய மாஜி பா.ஜ., பிரமுகர் கைது
ADDED : ஜன 24, 2025 10:26 PM

வானுார் ,; வானுார் அருகே மர வுட் ஒர்க் கடையில், தேக்கு மர சோபாக்களை திருடிய மாஜி பா.ஜ., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவரத்தினம் மனைவி ராதா, 39;. இவருக்கு வாழப்பட்டாம்பாளையம் பகுதியில் சொந்தமாக ராதா வுட் ஒர்க்ஸ் கடை உள்ளது. இங்கு பர்னிச்சர் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 18ம் தேதி கடையில் தயாரித்து வைக்கப்பட்ட இரண்டு தேக்கு மர சோபாவை காணவில்லை. மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 45 ஆயிரமாகும். இது குறித்து ராதா, ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கிடைத்த தகவலின் பேரில், வாழப்பட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் (எ) மீன் சேகர், 41; என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் ராதா வுட் ஒர்க்ஸ் கடையில் மர சோபாவை திருடியதாக ஒப்புக்கொண்டார். அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். இவர், பா.ஜ.,வில் முன்னாள் விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

