/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா
/
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூன் 04, 2025 12:36 AM

வானுார் : வானுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 102வது பிறந்தநாள் விழா கொழுவாரி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நடந்தது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் முரளி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் உஷா முரளி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், மாரிமுத்து, கோட்டகுப்பம் நகர்மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நடந்த கைப்பந்து போட்டியை துவக்கி வைத்து, பெண்களுக்கு சேலை மற்றும் போர்வை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கரன், மைதிலி ராஜேந்திரன், ராஜி, புஷ்பராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சங்கர், பாலு, முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துவேல், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் அய்யப்பன், அச்சரம்பட்டு வினோத் பங்கேற்றனர்.