/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்னாள் முதல்வர் நினைவு நாள் ஊர்வலம்
/
முன்னாள் முதல்வர் நினைவு நாள் ஊர்வலம்
ADDED : ஆக 08, 2025 02:05 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி மத்திய மாவட்ட தி.மு.க., வினர் அமைதி பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், நேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை அனுசரித்தனர். காலை 8:30 மணிக்கு விழுப்புரம் பெருந்திட்ட வளாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து, தி.மு.க.,வினர் அமைதி பேரணியாக புறப்பட்டு திருச்சி சாலையில் சென்றனர்.
கலைஞர் அறிவாலயத்தில் பேரணியை நிறைவு செய்து, அங்குள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் தலைமையில், சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவியும் மரியாதை செலுத்தினர்.
நகர செயலாளர் சக்கரை, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகர மன்ற கவுன்சிலர்கள் மணவாளன், புருஷோத்தமன், பத்மநாபன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, விழுப்புரம் நகர தி.மு.க., அலுவலகத்திலும், கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கினர்.

